Saturday 23 January 2021

 துர்கா தாண்டவம்

ஆசி கந்தராஜா

லசலத்து ஓடிக்கொண்டிருந்தது நைல் நதி.

வெசொங்காஅதிலே குளித்துக் கொண்டிருந்தான். அந்தக் குளிப்பு திருப்தி தருவது. கடந்த சில நாட்களாகஅவனுக்கு தன்மீதே ஒருவகை வெறுப்பு. அந்த வெறுப்பு மற்றவர்கள் மீது பற்றிப் படர்வதாகவும் தோன்றுகிறது.

நதியில் நீச்சல்வாழ்க்கையில் எதிர் நீச்சலா?

வெசொங்கா, Barக்கு சீக்கிரம் வந்திடு. அதையும் இதையும் பிணைத்துக் குழம்பாதே!’ என்று எலிசபெத் குரல் கொடுத்தாள். அவள் இவனின் தாய். கிழக்கு ஆபிரிக்க நாடுகளிலே பொதுமொழியாகப் பயிலப்படும் ‘சொகியில்’ பேசினாள். தொழில் முறையாக இந்த மொழியில் பேசத்துவங்கி அதுவே வீட்டு மொழியும் ஆகிவிட்டது. ‘மசாய்’ இனத்தைச் சேர்ந்தவள் என்கிற அடையாளம் மெல்ல மெல்ல விலகுகின்றது.

மகன்படும் வேதனைகளை எலிசபெத் நன்கு அறிவாள். ஆனால் சர்வ வல்லமையுள்ள சர்வாதிகாரியாக நடந்து கொள்ளும் அந்தக் கிழவனை எதிர்த்து அவளால் என்ன செய்யமுடியும்?

தாயின் குரலுக்கு மதிப்புக் கொடுப்பவன் போலஇறுதியாக ஒரு தடவை நதியிலே முங்கி எழுந்து கற்பாறையின் மீத தாவிஅங்கு வைத்திருந்த துணியினால் ஈரத்தை துவட்டியவாறு லேக்விக்டோரியாவை நோக்கி நடக்கலானான். அவனது கரிய மேனியிலும் சுருண்ட கேசத்திலும் துடைபடாதிருந்த நீர்த்துளிகள் மாலை வெய்யிலின் மஞ்சள் ஒளிபட்டு வைரங்களாக மின்னின. வெசொங்கா குளத்தின் கரையை அடையவேஅவன் தாயும் தலைச்சுமையுடன் ஓட்டமும் நடையுமாக அவன் பின்னால் வந்து சேர்ந்தாள்.

லேக் விக்டோரியாவை சாதாரண தெப்பக்குளம் என்று எண்ணுவது தப்பு. உலகின் இரண்டாவது பெரிய நன்நீர் ஏரி. உகண்டாகென்யாதன்சானியா ஆகிய கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்கு நடுவே எல்லையாக அமைந்து அந்த நாடுகளுக்கு நீர்வளத்தினை அள்ளிச்சொரியும் ராட்சதகுளம். இந்த நாடுகளுக்கிடையேயான பண்டமாற்றமும் போக்குவரத்தும் பெரும்பாலும் இதன்மூலம் தான். குளத்தின் கரைகளில் எல்லாவித ரசனைக்குமேற்ற மிதக்கும் நைற்கிளப்புகளும் மதுபான சாவடிகளும் உண்டு. கப்பலின் பரிமாணத்தை தொடும் வள்ளங்களில் அமைந்துள்ள இவை மிதக்கும் ஹோட்டல்களைப் போன்றவை. இத்தகைய Bar ஒன்றில் தான் வெசொங்கா இரவில் கிற்றார் இசைப்ப வனாகப் பணிபுரிகிறான்.

ஏரிக்கரையையும் வள்ளத்தையும் இணைக்கும் தொங்கு மரப்பாதை மீது நடந்து வெசொங்கா வள்ளத்தை அடையவே மைமல் கடந்து இருள் பரவத் துவங்கியது. வள்ளத்தை அலங்கரிக்க பொருத்தப்பட்ட வர்ண விளக்குகள் வர்ணக் கலவைகளை உமிழ்ந்து குளக்கரையை சொர்க்க பூமியாக்கிக் கொண்டிருந்தன. வெள்ளைக்காரர்களும் உகண்டாவின் உள்ளூர் பணக்கார கறுப்பர்களும் குடிவகைகளை சுவைத்தவாறே நடனமாடுவதற்கு தயாராக சோடிசோடியாக வம்பளத்துக் கொண்டு நின்றார்கள். வெசொங்கா இன்று சுணங்கி விட்டான். இந்நிலையில் அவனுடன் இணைந்து வாத்தியம் வாசிக்கும் யோன் தனியே ‘டிரம்’ வாசித்துக் கொண்டிருந்தான். தொங்கு பாலத்தினூடாக வெசொங்கா ஆடிஅசைந்து வருவதைக் கண்ட பிரான்சிஸ் தனது கனமான தேகத்தை குலுக்கிச் சத்தம் போட்டான். பிரான்சிஸ் இதைப்போன்ற பல மிதக்கும் சொர்க்காபுரிகளின் சொந்தக்காரன். ஒவ்வொரு வள்ளத்தின் அடித்தளத்திலும் ஒவ்வொரு மனைவியரைக் குடியமர்த்தியிருந்தான். வள்ளங்களின் நேர்த்தியான நிர்வாகத்திற்கும் கொழுத்த வருமானத்துக்கும் இந்த மனைவியரே ஆதாரம். மனைவிகளின் எண்ணிக்கையை பெருக்கிக் கொள்வதும் அவனைப் பொறுத்தவரை ஒரு வியாபாரம் தான். கிழவன் பிரான்சிஸின் அதட்டலை சட்டை செய்யாது, Barஇல் பணிபுரியும் மேரிக்கு கையசைத்துபறக்கும் முத்தம் ஒன்றை தூதனுப்பியவாறே வள்ளத்தின் கீழ்ப்பகுதிக்கு சென்றான். அங்குதான் அவன் தாய் எலிசபெத் வசிக்கிறாள்.

அவனுடைய அந்தச் செயல் கிழவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அடக்கிக் கொண்டான். அங்கு பணிபுரியும் வேறு யாராவது அப்படி உதாசீனப்படுத்தி யிருந்தால்அந்த இடத்திலேயே நாலு அறைகள் சாத்தி தண்ணீருக்குள் தள்ளியிருப்பான். கிழவனாயினும் பிரான்சிஸ் இன்னமும் பலசாலியே.

பிரான்சிஸுக்கு ஏன் அனாவசியமாக கோபமூட்டுகிறாய்?’ என்று கேட்டவாறே தாய் எலிசபெத் அவன் அருகில் வந்தாள்.

வெறுப்புடன் தாயை நிமிர்ந்து பார்த்தவன்பதில் ஏதும் சொல்லாதுதான் அணியவேண்டிய பலவர்ண மினுங்கல் உடைகளை அணியலானான்.

என்ன இருந்தாலும் பிரான்சிஸ் உன்னுடைய தந்தை’ என்று உபதேசம் ஒன்றினை ஆரம்பிக்க நினைத்த எலிசபெத் தொடரமுடியாது தவித்தாள். அந்த தவிப்பின் சூக்குமத்தை என்றும் வெசொங்கா தவறவிடுவதில்லை.

எனக்கு மட்டுமாஉனக்கும் அந்தக் கிழவன்தான் தந்தை… இல்லையாஅந்தக்கிழவன் உனக்குத் தந்தையும் மாப்பிளையும்’ கோபத்தில் வார்த்தைகளை குதறிக் கொட்டினான்.

தாய் எதுவுமே பேசவில்லை. தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.

கிழவனை எதிர்த்து நிற்க இயலாத நிலையில்தன் தாய் அவனிடம் சோரம் போய் மனைவி அந்தஸ்து பெற்ற வரலாறு அவனுக்குத் தெரியும். இதனைச் சொல்லி தாய் கண்ணீர் விட்டதும் உண்டு. இருப்பினும் இந்த வினோத உறவுமுறை அவனைச் சினங்கொள்ள வைத்தது. கிழவனின் ஆதிக்கத்திருந்து விடுபட்டுச் சுதந்திரமாக வாழப் பணம் வேண்டும். இதனால் பல்கலைக்கழக மாணவனான அவன்பணம் சேர்ப்பதற்காக பகுதி நேர வேலைகள் பார்க்கிறான். பிரான்சிஸின் வள்ளத்தில் கிற்றார் வாசிப்பதும் பகுதி நேர வேலையே. அத்துடன் எலிசபெத்தின் மகன் என்கிற முறையிலே கீழ்த்தளத்தில் வாழ்கிற உரிமையும் அவனுக்கு இருந்தது.

வந்திருந்த விருந்தினர்களால் வள்ளம் நிரம்பி வழிந்தது. மரத்தினால் ஆன தொங்கு பாலங்களிலும் உல்லாசிகள் சிதறி நின்றார்கள். இவர்களின் நடுவே ஆடவரை படுக்கைக்கு அழைக்கும் ஆபிரிக்க அழகிகள் கண் ஜாடைகள் மூலம் பொதுமொழி பேசிக் கொண்டிருந்தார்கள். இத்தனை ஆரவாரங்களுக்கு மத்தியில் ஒரு அவசர தருணத்தை தேர்ந்தெடுத்து, ‘வெசொங்கா நாளைக்கு எத்தனை மணிக்கு பல்கலைக்கழகம் போகிறான்நான் அவனை அவசரம் சந்திக்க வேண்டும்’ என்று மேரிஎலிசபெத்தின் செவிகளிலே கிசுகிசுத்தாள். கிளாஸுகளைக் கழுவிக் கொண்டிருப்பதான பாவனையை தொடர்ந்து கொண்டே ‘ஏன்உன் அப்பன் ஏதாவது தொந்தரவு தருகிறானா?’ எனப் பரிவுடன் கேட்டாள்.

மகனுக்கும் மேரிக்கும் காதல் அரும்பி வளர்ந்துள்ளதை தாய் எலிசபெத் அறிவாள். இந்தக் காதலை அவள் மனசார வரவேற்றாள். இவர்களுடைய மணவாழ்க்கைவாழ்க்கையிலே தனக்கொரு புதிய பிடிப்பினையும் அர்த்தத்தையும் கொண்டு வந்து சேர்க்கும் என எதிர்பார்த்தாள்.

இந்த காதலை கிழவன் அனுமதிப்பானாஇதை நினைக்கும் போது எலிசபெத்தின் ரத்தம் உறைந்தது. வழமைபோல நடுநிசி தாண்டியதும் Bar மூடப்பட்டது. எலிசபெத் சுணங்காது கீழ்த்தளத்திற்கு வந்தாள். மகன் வெசொங்கா அசதியுடன் கட்டிலில் படுத்துக் கிடந்தான். தூங்கவில்லை. கட்டில் ஓரத்தில் அமர்ந்து கொண்டாள்.

மேரி உன்னை நாளைக்கு அவசியம் சந்திக்க விரும்புகிறாள்….’

ஏன்?’ என்கிற வினாவை விழிகளிலே தாங்கி தாயைப் பார்த்தான். ‘மேரிக்கான மணப்பெண் விலையை அவன் அப்பன் உயர்த்தியுள்ளானாம். ஆடுகளுடன் புதிய வீடு ஒன்று கட்டித் தர வேண்டுமென்றும் கேட்கிறானாம்…’

மனிசன் இப்படி நாளுக்கும் பொழுதுக்கும் பேச்சு மாற்றுவதாமுப்பத்தைந்து ஆடுகள் போதுமென்று தானே ஆரம்பத்தில் சொன்னான்.’

வேறு யாராவது ஆசை காட்டினார்களோ யார் அறிவர்வீடு கட்டுவதற்கு நீயும் நானும் சம்பாதித்து வைத்துள்ள பணம் எந்த மூலைக்கு?’ என்று தாய் அங்கலாய்த்தாள். வெசொங்கா இடிந்து போனவனாகக் காணப்பட்டான்.

கர்த்தர் கைவிட மாட்டார். மேரி உன் மீது மாறாத அன்பு வைத்திருப்பதை நான் அறிவேன்… நல்லன நடக்கும் என்கிற நினைவுடன் தூங்கு’ என்றவாறே மகனின் தலையை அன்புடன் தடவிக் கொடுத்தாள் எலிசபெத்.

அடுத்த நாள் வெசொங்கா பல்கலைக் கழகத்துக்கு முன்னால் உள்ள கம்பாலா  பஸ் நிலையத்தில் இறங்கிய பொழுது மேரி அவனுக்காக காத்திருந்தாள்.

என்னைக் காண இவ்வளவு தூரம் வரவேண்டுமா?’ என்றவாறே மேரியை அணைத்து முத்தமிட்டான்.

வேலை நேரத்தில் உன்னுடன் பேசுவதற்கு பிரான்சிஸ் எனக்கு தடைவிதித்துள்ளதை நீ அறிவாயா…?’

என்னைச் சீண்ட கிழவன் இப்படி ஏதாவது செய்து கொண்டே இருப்பான். அதிருக்கட்டும். உன் அப்பன் பேச்சு மாறிக் குதிக்கிறானாம். ஆட்டுடன் புதிதாக வீடு ஒன்றும் கேட்கிறானாம்…’

 ‘இந்த விஷயத்தை விளக்கமாக உனக்குச் சொல்லத்தானே நான் இங்கு காத்திருக்கிறேன். உன் அப்பன்பிரான்சிஸ் கிழவன்இரண்டு நாள்களுக்கு முன் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறான். பத்தோடு பதினொன்றாக என்னையும் தன் மனைவியாக்கிக் கொள்ள என் அப்பனிடம் சம்மதம் கேட்டிருக்கிறான். ஆடுகளுடன் புதிய வீடு ஒன்று கட்டித் தருவதாகவும் ஆசை காட்டி யிருக்கிறான். இந்த உறவுக்கு ஆதரவு தருவதற்காக என் ‘மசாய்’ இனத்தலைவனுக்கும் ஆடுகள் தருவதாக வாக்களித்துள்ளான்’ என்றாள் மேரி கண்களிலே நீரை சுமந்தவாறு.

என் அப்பன் – என் தாயின் அப்பன் – எனக்குப் போட்டியாக உன்னைப் பெண் கேட்கிறானா?’ வெசொங்காவின் இரத்தம் கொதித்தது. தன்னை வஞ்சிக்க கிழவன் செய்யும் வேலைதான் இதுவென புரிந்து கொண்டான்.

இங்கிருந்து ஓடிப் போய்விடலாமா வெசொங்காஆயத்தமாகவே வந்திருக்கிறேன். பிரான்சிஸ் கிழவன் நினைத்ததை சாதிப்பவன். அவனிடம் செல்வமும் உண்டு செல்வாக்கும் உண்டு. கென்யாவில் என் சிநேகிதி ஒருத்தி Barஇல் வேலை செய்கிறாள். அவள் நிச்சயம் எங்களுக்கு உதவுவாள்’

ஓடிப்போவதால் பிரச்சனை எதுவும் தீராது மேரி. கிழவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவாகுதல் உன்னை நான் முறைப்படி சீர்கொடுத்து மீட்க வேண்டும். அதுவரை உன் அப்பனை சமாளி. என் தாய் எப்பொழுதும் உனக்கு ஆதரவாக இருப்பாள். தைரியத்தை இழக்காதே…’ என்றவாறே விரிவுரைகளுக்கு விரைந்தான் வெசொங்கா.

கிழவன் பிரான்சிஸ் பழுத்த அனுபவசாலி. எதையாவது அடைய தீர்மானித்துவிட்டால் அதை அடையும் வரை அவனுக்கு தூக்கமிருக்காது. சாமபேத தான தண்டம் என எதையும் பிரயோகிக்க தயங்கமாட்டான். அத்தகைய குணத்தால்தான் இத்தகைய செல்வத்தையும் பெருமளவு மனைவியரையும் அவனால் பெற்றுக் கொள்ள முடிந்தது. வெசொங்கா அவனது இரத்தம். ஏன் ரத்தத்தின் ரத்தம் கூட. அவனது குணத்தையும் கிழவன் அறியாததொன்றல்ல. இருப்பினும் மேரியின் அழகுக்கு முன்னால்நீயா நானா என்று வந்தபின் தந்தையாவது மகனாவது…வெசொங்கா ஊரில் இல்லாத நாள் பார்த்து இரகசியமாக மேரியின் அப்பனுடனும் மசாய் இனத்தலைவனுடனும் கலந்து பேசிபெண் எடுக்கும் நாள் குறித்து விட்டான். அவசர அவசரமாக காரியங்கள் நடந்தேறின. அவர்களது இனவழக்கப்படி பரிசம் போடுவதற்கு முன்னால் அன்றைய விருந்துக்கு வெட்டப்படும் ஆட்டைச் சுற்றி பெண்கள் திறந்த மார்புடன் நடனமாட வேண்டும். மணம் முடிக்கும் ஆணும்பெண்ணும் ஆட்டத்தில் இணையும்போது ஆடு வெட்டப்பட்டு ஆட்டின் குருதியினால் மணமக்களின் கைகள் நனைக்கப்படும். இச்சடங்கிலே உரிய விலை பெறப்பட்டபின்னர்பெண் மணமகனுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டாள் என்பதற்குஅந்த நடனவிருந்திலே கலந்து கொண்ட விருந்தினர்கள் சாட்சிகளாய் அமர்வர்.

மேளச் சத்தங்களுக்கும் குரவைச் சத்தத்துக்கும் நடுவே வெள்ளாடு மிரள மிரள விழித்துக்கொண்டு நின்றது. நடனமாடும் பெண்களுடன் தன் மனைவிமார் அனைவரையும் கலந்து கொள்ளும்படி பிரான்சிஸ் பணித்திருந்தான். அவ்வாறு பெரும் எண்ணிக்கையில் மனைவியர் கலந்து கொள்வது தன் ஆண்மைக்குரிய அங்கீகாரம் என பிரான்சிஸ் கருதினான். எலிசபெத் பிரான்சிஸின் மகள். அவன் மனைவியும் கூட. நிர்ப்பந்தம் காரணமாகவே மனைவி ஸ்தானத்தில் அவளும் ஆட்டத்தில் இணைய வேண்டியதாயிற்று.

நேரம் நெருங்கியது. உக்கிரமான மேளம் முழங்க பாட்டுச் சத்தங்களும் ஆட்ட வேகமும் அதிகரித்தது. மேரி வலுக்கட்டாயமாக அவளது அப்பனால் வெள்ளாட்டின் அருகே இழுத்து வரப்பட்டாள். ஆட்டமாதர்களின் நடுவே வெசொங்காவின் தாய் எலிசபெத்தைக்கண்ட மேரிதிமிறி ஓடி அவளின் கால்களைக் கட்டிக்கொண்டாள். எலிசபெத்தால் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தலை சுற்றியது. ஒரு கணம் கண்ணை மூடித் திறந்தாள். ஆடும் அதன் தலை கொய்வதற்கான கத்தியும் கண்முன்னே தெரிந்தன. வெறிகொண்டவள்போல பாய்ந்தோடி கத்தியை எடுத்தாள்.

பலம் முழுவதையும் கைகளிலே செலுத்தி ஒரே வீச்சு…,

கிழவன் பிரான்ஸிஸின் தலை நிலத்தில் உருண்டது.

(குமுதம்தீராநதி ஜூலை 2002)

 


No comments:

Post a Comment

.